என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உறவினர்கள் புகார்"
மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு விபத்து மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவசர சிகிச்சை பிரிவில் மதுரை அருகே உள்ள பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா (வயது 50), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (55), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (60), உடுமலைப்பேட்டை ஆறுமுகம், செல்லத்தாய் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மல்லிகா, ரவிச்சந்திரன், பழனியம்மாள் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இன்று ஆறுமுகம், செல்லத்தாய் ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர்.
மதுரையில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அரசு ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள் மீது விழுந்ததில் மின் தடை ஏற்பட்டது.
2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மின் தடையால் அரசு ஆஸ்பத்திரியில் வெண்டிலேட்டர் இயங்கவில்லை எனவும், இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேரும் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெண்டிலேட்டர் இயங்காததால் 5 பேர் இறந்தது குறித்த தகவல் அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் இன்று மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள், அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரியும் வலியுறுத்தினர்.
இந்த சம்பவத்தில் இறந்த மல்லிகாவின் உறவினர் கணேசன் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு தான் மல்லிகாவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். நேற்று காலை கூட அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார்.
மாலையில் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு வைக்கப்பட்டிருந்த வெண்டிலேட்டர் இயங்கவில்லை. ஜெனரேட்டரையும் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மல்லிகாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே இறந்து விட்டார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இதே போல் இறந்த ரவிச்சந்திரனின் உறவினர் மாரீஸ்வரன் கூறுகையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இங்கு வந்து சேர்த்தோம். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆபரேசன் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
நாளை ஆபரேசன் செய்ய இருந்த நிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று மின்தடை ஏற்பட்ட உடனேயே ரவிச்சந்திரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அரசு மருத்துவமனையில் அவசர காலங்களில் ஜெனரேட்டரை இயக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #MaduraiGovernmenthospital
கொழிஞ்சாம்பாறை:
பொள்ளாச்சி அருகே உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருமாட்டியை சேர்ந்தவர் கிரிஷ்குமார் (வயது 30). இவரது மனைவி சினி (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பாலக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 20-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தாயும், குழந்தையும் ஆபத்தான நிலையில் உள்ளது. திருச்சூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து ஆம்புலன்சில் இருவரையும் நேற்று அழைத்துச்சென்றனர். உறவினர்களில் சிலர் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மீனாட்சிபுரம் போலீசில் புகார் செய்தனர்.
ஆம்புலன்சில் சென்றபோது தாயும், குழந்தையும் அடுத்தடுத்து இறந்தனர். மீனாட்சிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிகிச்சையில் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 48). இவரது மனைவி பிரேமா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவன்-மனைவியும் தேவகோட்டை பஸ் நிலையத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் வெளியூரில் வேலை பார்ப்பதால் கணவன், மனைவி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு இருவரும் வீடு திரும்பினர். சிறிதுநேரத்தில் ராஜா வெளியே புறப்பட்டார்.
பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது பிரேமா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ் பெக்டர் மருது ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே பிரேமாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், ராஜா மீது சந்தேகம் உள்ளதாகவும் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்